மேலும் செய்திகள்
நலத்திட்ட உதவி வழங்கல் முதல்வர் துவக்கி வைப்பு
23-Feb-2026
புதுச்சேரி:: முன்னாள் எம்.எல்.ஏ., நடராஜனின் 3ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ.,நடராஜனின் 3ம் ஆண்டு நினைவு தினம் நிகழ்ச்சி வில்லியனுாரில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியையொட்டி, நடராசனார் அறக்கட்டளை சார்பில், அதன் தலைவர் சரவணன் தலைமையில், உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அத னை தொடர்ந்து, ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், சங்கர், வில்லியனுார் என்.ஆர்., காங்., தலைவர் செந்தில், சாமி, புகழேந்தி, சம்பத் உட்பட கிராம மக்கள் கலந்து கொண்டனர். குணால் நன்றி தெரிவித்தார்.
23-Feb-2026