உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆரோவில்லில் புதிய களரி பயிற்சி மையம்; அறக்கட்டளை செயலாளர் துவக்கி வைப்பு

ஆரோவில்லில் புதிய களரி பயிற்சி மையம்; அறக்கட்டளை செயலாளர் துவக்கி வைப்பு

வானூர் : சர்வதேச நகரமான ஆரோவில் பாரத் நிவாசில் பாரத் களரிபயட்டு பயிற்சி மைய துவக்க விழாநடந்தது. களரி என்பது உலகின் மிக பழமையான தற்காப்பு கலை. இந்த களரியின் முக்கிய அடித்தளம் வர்மம் என்ற வைத்திய முறை. மருத்துவத்திற்காகவும், தற்காப்புக்காகவும் உருவாக்கப்பட்ட இந்த கலையானது பின்னாளில் போர்க்கலையாக மாறியது. அழிந்து போன இந்த தற்காப்பு கலையை மீட்டெடுக்கும் வகையில், ஆரோவில் பாரத் நிவாசில், பாரத் களரிபயட்டு பயிற்சி மைய துவக்க விழா நடந்தது.ஆரோவில் அறக்கட்டளை செயலாளர் ஜெயந்தி ரவி கலந்து கொண்டு, புதிய பயிற்சி மையத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், ஆரோவில் அறக்கட்டளை உறுப்பினர் நிரிமா ஓசா, சிறப்பு அலுவலர் சீதாராமன், பாரத் நிவாஸ் அறங்காவலர் ஜன்மஜெய் மோகந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பயிற்றுநர் லட்சுமணன் தலைமையில், 25 மாணவர்கள் பங்கேற்று, வாள், கேடயம், உருமி உள்ளிட்ட பாரம்பரிய ஆயுதங்களோடு களரி நிகழ்ச்சியை அரங்கேற்றினர். விழாவில் கலந்து கொண்ட அறக்கட்டளை செயலாளர் ஜெயந்தி ரவி கூறுகையில், களரி என்பது ஒரு சண்டைக் கலை மட்டுமல்ல. இது ஆரோக்கியம், ஆன்மீக வளர்ச்சிக்கான பண்டைய வழிமுறை. இதை வாராந்திர நிகழ்ச்சியாக இரண்டு முதல் மூன்று மணி நேரம் ஆரோவில் வாசிகளுக்கு வழங்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை