உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரூ. 14 லட்சம் மதிப்புள்ள ட்ரோன் பேட்டரி பெற்று மோசடி

ரூ. 14 லட்சம் மதிப்புள்ள ட்ரோன் பேட்டரி பெற்று மோசடி

புதுச்சேரி: ட்ரோன் பேட்டரி வாங்கி ரூ. 14 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரி திருமுடி நகரைச் சேர்ந்தவர் லோகேஷ்ராஜ். கல்லுாரி படிப்பை முடித்த லோகேஷ்ராஜ், ட்ரோன்களுக்கான பேட்டரி தயாரிக்கும் தொழிலை துவக்கி உள்ளார். இவரை தொடர்பு கொண்ட ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரி தனது விவசாய நிலத்திற்கு பயன்படுத்தும் ட்ரோன்களுக்கு பேட்டரி வேண்டும் என கேட்டுள்ளார். அதன்படி, லோகேஷ்ராஜ் ரூ. 13,91,000 மதிப்புள்ள ட்ரோன் பேட்டரிகளை தயாரித்து ஆந்திராவிற்கு அனுப்பினார். பேட்டரியை வாங்கி கொண்ட நபர், பணம் தராமல் ஏமாற்றி வருகிறார். இது தொடர்பாக லோகேஷ்ராஜ் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.வில்லியனுார் ஒதியம்பட்டைச் சேர்ந்த முகமது ரபிக், ஆன்லைன் லிங்க் மூலம் ரூ. 2,500க்கு, மளிகை சமான்கள் ஆர்டர் செய்தார். ஆனால், பொருட்கள் அனுப்படாமல் ஏமாற்றினர்.வில்லியனுாரைச் சேர்ந்த பூவராகவன் என்பவரை தொடர்பு கொண்ட மர்ம நபர், தங்களின் கம்பெனி குலுக்கலில் உங்களுக்கு எல்.இ.டி., டி.வி., பைக், தங்க நாணயம் விழுந்துள்ளதாகவும், அதற்கு பணம் செலுத்த வேண்டும் என கூறி ரூ. 19,850 பெற்று ஏமாற்றி உள்ளார். உருளையன்பேட்டையைச் சேர்ந்த ராகுல் என்ற வாலிபரை தொடர்பு கொண்ட மர்ம நபர், வீட்டில் இருந்து பகுதி நேர வேலை பார்க்கலாம் என கூறியதை நம்பி, ரூ. 23,500 செலுத்தி ஏமாந்தார்.இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி