அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்
திருக்கனுார் : காட்டேரிக்குப்பம் இந்திராகாந்தி அரசு உயர்நிலைப் பள்ளியில் கல்வித்துறை மூலம் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு, 55 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கினார். தொடர்ந்து 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றதற்காக, பள்ளியின் தலைமை ஆசிரியர் ஹரி கோவிந்தன் மற்றும் ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டினார்.விழாவில், முன்னாள் எம்.எல்.ஏ., அருள்முருகன், பா.ஜ., பிரமுகர் முத்தழகன், கல்வித்துறை முதன்மை கல்வி அதிகாரி குலசேகரன், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன், உடற்கல்வி ஆசிரியர் பாலசங்கர், ராஜா, ஜெயகுமார், மஞ்சனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக, கொடாத்துார், சுத்துக்கேணி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.தொடர்ந்து, சந்தை புதுக்குப்பம், காட்டேரிக்குப்பம் கிராமங்களில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச காலணி மற்றும் போர்வையை அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார்.