உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இலவச காலணி போர்வை வழங்கல் 

இலவச காலணி போர்வை வழங்கல் 

புதுச்சேரி : திலாசுபேட்டையை சேர்ந்த பயனாளிகளுக்கு இலவச காலணி மற்றும் போர்வையை அரசு கொறடா ஆறுமுகம் நேற்று வழங்கினார். புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் 60 வயத்திற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச காலணி, போர்வை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்திரா நகர் தொகுதி திலாசுபேட்டை அங்கன்வாடி மையத்தில் நடந்த நிகழ்ச்சியில், அரசு கொறடா ஆறுமுகம் தலைமை தாங்கி, பயனாளிகளுக்கு இலவச காலணி மற்றும் போர்வை வழங்கினார். இதில், துறை அதிகாரிகள், அங்கன்வாடி ஊழியர்கள், என்.ஆர்.காங்., பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை