மேலும் செய்திகள்
சூர்யா பாலிடெக்னிக்கில் மருத்துவ முகாம்
01-Jan-2025
புதுச்சேரி: புதுச்சேரி போக்குவரத்து துறை சார்பில், 36வது சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் நடந்தது.பி.ஆர்.டி.சி., பணிமனையில் நடந்த மருத்துவ முகாமை போக்கு வரத்து ஆணையர் சிவக்குமார் துவக்கி வைத்தார். இணை ஆணையர் குமரன், செயற்பொறியாளர் சீத்தாராம் ராஜு முன்னிலை வகித்தனர்.இதில், பி.ஆர்.டி.சி., பொது மேலாளர் கலியபெருமாள், மேலாளர் குழந்தை வேலு, உதவி பொறியாளர் சிவஞானம் உட்பட பலர் பங்கேற்றனர். முகாமில், கொசப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி செல்வி தலைமையிலான மருத்துவ குழுவினர் பொது மருத்துவம், நீரிழிவு மற்றும் ரத்தக்கொதிப்பு பரிசோதனை மற்றும் சிகிச்சை அளித்தனர்.தொடர்ந்து, புதுச்சேரி காசநோய் ஒழிப்பு, விழிப்புணர்வு 100 நாள் திட்டத்தின் கீழ் முதுநிலை காசநோய் மேற்பார்வையாளர் பாஸ்கரன், பார்வையாளர் விஜயா தலைமையிலான குழுவினர் மார்பக காசநோய் பரிசோதனை மேற்கொண்டனர்.இதில், பி.ஆர்.டி.சி., பஸ் ஓட்டுனர்கள், நடத்துனர்கள், ஊழியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். இன்றும் (22ம் தேதி) மருத்துவ முகாம் நடக்கிறது.
01-Jan-2025