மேலும் செய்திகள்
பல்கலைக்கழகத்தில் பொது மருத்துவ முகாம்
08-Feb-2025
திருபுவனை: செல்லிப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் என்.ஆர்.காங்., மற்றும் மணக்குள விநாயகர் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை இணைந்து இலவச மருத்துவ முகாமை நடத்தின.முன்னாள் எம்.எல்.ஏ., கோபிகா முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் விஷ காய்ச்சலுக்கான பரிசோதனை, சர்க்கரை நோய், ரத்த ஆக்சிஜன் அளவு, பரிசோதனை ரத்த அழுத்தம், சளி, இருமலுக்கான மருத்துவம், மகப்பேறு ஆலோசனை, பொது மருத்துவம் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.மருத்துவ குழுவினர் நோயாளிகளை பரிசோதித்து மருந்து, மாத்திரைகள் மற்றும் மருத்துவ ஆலோசனை வழங்கினர். நிகழ்ச்சியில் என்.ஆர்.காங்., திருபுவனை தொகுதி தலைவர் ராஜா, மாநில பிரதிநிதி ராஜா, கலிதீர்த்தாள்குப்பம் மணவாளன், தொகுதி பொதுச் செயலாளர் பாலு துணைத் தலைவர் சக்திவேல் விஜி மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
08-Feb-2025