மேலும் செய்திகள்
இன்றைய மின் தடை
24-Apr-2025
புதுச்சேரி: புதுச்சேரி ராமகிருஷ்ண மடம் சார்பில், இலவச பொது மருத்துவ முகாம் வில்லியனுார் பிள்ளையார்குப்பம் கிராமத்தில் நடந்தது.முகாமினை, புதுச்சேரி ராமகிருஷ்ண மடத்தின் பொறுப்பாளர் சுவாமி நித்யேஷானந்தர் துவக்கி வைத்தார். முகாமில் மருத்துவக் குழுவினர் பங்கேற்று பொது மருத்துவம், சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆலோசனை வழங்கி, சிகிச்சை அளித்தனர்.தொடர்ந்து இலவசமாக மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. முகாமில் பிள்ளையார் குப்பம், எம்.ஜி.ஆர்.நகர், புதுநகர், கிருஷ்ணா நகர் மற்றும் கூனி முடக்கு உள்ளிட்ட கிராம மக்கள் பங்கேற்று பயனடைந்தனர்.
24-Apr-2025