உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இலவச மருத்துவ முகாம்

இலவச மருத்துவ முகாம்

புதுச்சேரி: நாதன் அறக்கட்டளை மற்றும் பிம்ஸ் மருத்துவமனை சார்பில் ஜீவானந்தபுரம், டான் பாஸ்கோ மேல்நிலைப் பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.அறக்கட்டளை நிறுவனரான முன்னாள் எம்.எல்.ஏ., சாமிநாதன் முகாமை துவக்கி வைத்தார். டாக்டர்கள் ஹரிஷ், கிலாடிஸ் தலைமையிலான மருத்துவக் குழுவினர் நீரழிவு நோய் சிகிச்சை, கண் பரிசோதனை, இ.சி.ஜி., எலும்பு மருத்துவம், பல் மருத்துவம் உள்ளிட்ட சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கினர்.இதில், ஜல முத்து மாரியம்மன் கோவில் கமிட்டி நிர்வாகிகள்,நாதன் அறக்கட்டளை நிர்வாகிகள் சுப்ரமணி, வெங்கடேசன், நடராஜ், ஜெகதீஷ், சுரேஷ்குமார், வழக்கறிஞர் கார்த்தி, விஜய பூபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !