உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இலவச மருத்துவ முகாம்

இலவச மருத்துவ முகாம்

புதுச்சேரி: ராமலிங்க சுவாமி கோவில் மடம் 78ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, முதலியார்பேட்டை வள்ளலார் சபை மற்றும் அக் ஷயா மெடிக்கல் சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் வள்ளலார் சபை மடத்தில் நடந்தது. முகாமினை வள்ளலார் திருத்தொண்டர் கோபாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். முகாமில் மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு தோல் சிகிச்சை, கண் பரிசோதனை, பிசியோதெரபி சிகிச்சை, அக்குபஞ்சர் சிகிச்சைகள் மற்றும் ஆலோசனை, இலவசமாக மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், தைராய்டு, பாத எரிச்சல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. முகாமில் ஏராளமானோர் பங்கேற்று, பயனடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ