உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தீபாவளிக்கு முன் இலவச அரிசி முதல்வர் ரங்கசாமி தகவல் முதல்வர் ரங்கசாமி தகவல்

தீபாவளிக்கு முன் இலவச அரிசி முதல்வர் ரங்கசாமி தகவல் முதல்வர் ரங்கசாமி தகவல்

புதுச்சேரி : தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகவே ரேஷன் கடைகளை திறந்து இலவச அரிசி வழங்கப்படும் என, முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில், 21 கி.மி., துாரத்திற்கு அழகிய கடற்கரை உள்ளது. இதை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உலகத்தில் உள்ள அனைத்து நாட்டு உணவுகளும் கிடைக்கக்கூடிய இடமாக புதுச்சேரி திகழ்கிறது. ரேஷன் கடைகளை திறந்து விரைவில் அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான ஒப்புதல், கவர்னரிடம் பெறப்பட்டுள்ளது. அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு, டெண்டர் விடப்பட உள்ளது. தீபாவளிக்கு முன்னர், ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு, இலவச அரிசி வழங்கப்படும். மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தான் உள்ளது. எங்களுக்கு எப்போதும் தேவையான உதவியை மத்திய அரசு செய்து வருகிறது. நாங்கள் பிரதமரை எப்போது வேண்டுமானாலும் சந்திப்போம். கடந்தாண்டை விட, டெங்கு தற்போது கட்டுக்குள் தான் உள்ளது. டெங்கு மட்டுமில்லாமல் இதர காய்ச்சல்களையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். கொசு மருந்து தெளிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அனைத்து துறைகளும் தற்போது இணைந்து பணியாற்றுகின்றனர். சுகாதாரத்துறை இயக்குநர் விரைவில் நியமிக்கப்படுவார். தேவையான மருந்து, மாத்திரை அரசு மருத்துவமனைகளில் கையிருப்பு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை