இலவச அரிசி சர்க்கரை வழங்கல்
அரியாங்குப்பம்: தீபாவளி இலவச சிறப்பு அரிசி மற்றும் சர்க்கரை பொருட்களை பாஸ்கர் எம்.எல்.ஏ., வழங்கினார்.தீபாவளி இலவச சிறப்பு அரிசி, சர்க்கரை வழங்கும் திட்டத்தை முதல்வர் ரங்கசாமி, மேட்டுப்பாளையத்தில் துவக்கி வைத்தார்.அதன் ஒரு பகுதியாக, அரியாங்குப்பத்தில்ராதாகிருஷ்ணர் நகர், தேங்காய்த்திட்டு ஆகிய பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில், 10 கிலோ அரிசி, இரண்டு கிலோ சர்க்கரை ஆகிய பொருட்களை எம்.எல்.ஏ., பாஸ்கர் பொதுமக்களிடம் வழங்கினார்.நிகழ்ச்சியில், என்.ஆர்., காங்., பிரமுகர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.