லட்சுமி நாராயணா மருத்துவ கல்லுாரியில் இலவச தைராய்டு பரிசோதனை முகாம்
புதுச்சேரி: புதுச்சேரி லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லுாரி நிறுவன தலைவர் ஜெகத்ரட்சகன் எம்.பி., பாரத் கல்வி குழும தலைவர் சந்தீப் ஆனந்த் வழிகாட்டுதலின்படி, பொதுமக்களுக்கு இலவச தைராய்டு பரிசோதனை முகாம் லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லுாரியில் நடந்தது.முகாமில், மருத்துவக் கல்லுாரி டீன் ஜெயலட்சுமி, துணை முதல்வர் பம்மி சின்ஹா, மருத்துவ கண்கணிப்பாளர் போஸ்கோ சந்திரகுமார், பொது அறுவை சிகிச்சை துறை தலைவர் செந்தில்வேலன் ஆகியோர் கலந்து கொண்டு தைராய்டு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.மூன்று நாள் நடந்த இம்முகாமில், நுாற்றுாக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு இலவச தைராய்டு பரிசோதனை செய்து பயனடைந்தனர். இம்முகாமில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோ விளக்க காட்சிகள் ஒளிபரப்பப்பட்டு, தைராய்டினை கண்டறியும் முறை மற்றும் அதற்கான சிகிச்சை முறைகளை பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. முகாமில் மருத்துவக்கல்லுாரி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கல்லுாரி தலைமை நிர்வாக அதிகாரி அன்பு செய்திருந்தார்.