உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இலவச யோகா பண்பு பயிற்சி முகாம் மூலக்குளத்தில் துவக்கம்

இலவச யோகா பண்பு பயிற்சி முகாம் மூலக்குளத்தில் துவக்கம்

புதுச்சேரி: புதுச்சேரி சிவராம்ஜி யோகா மையம் மற்றும் சமர்ப்பணம் சேவை மையம் இணைந்து நடத்தும் ஐந்தாம் ஆண்டு ஒரு வார இலவச யோகா பண்பு பயிற்சி முகாம் மே 1 ல் துவங்குகிறது. மாணவர்களிடையே ஒழுக்கம், பண்பு மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் ஆண்டுதோறும் ஒரு வாரம் இலவச யோகா பண்பு பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு முகாம் மூலக்குளம், அமிர்தா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மே 1ம் தேதி முதல் வரும் 7ம் தேதி வரை நடக்கிறது. முகாம் துவக்க விழா மே 1ம் தேதி காலை 9:00 மணிக்கு நடக்கிறது. விழாவிற்கு கணேசன் தலைமை தாங்குகிறார். சிவராம்ஜி யோகா மைய தலைவர் பால்ராஜா வரவேற்கிறார். முகாமை கவர்னர் கைலாஷ்நாதன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைக்கிறார். தொடர்ந்து முகாமிற்கு முன் பதிவு செய்துள்ள மாணவ, மாணவிகளுக்கு பாரதப் பண்பின் படி யோகா மற்றும் பிராணாயாமம், ​தற்காப்பு கலைகளான களரி மற்றும் சிலம்பம்,​ பரதம், இசை, ஓவியம் மற்றும் கதை சொல்லுதல்,​ விளையாட்டுப் போட்டிகள், வினாடி வினா மற்றும் மருத்துவம் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. முகாம் வரும் 7 ம் தேதி வரை தினசரி காலை 8:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடக்கிறது. இதன் நிறைவு விழா வரும் 7ம் தேதி மாலை 3:00 மணிக்கு பயிற்சி நடைபெறும், அமிதர்தா வித்யாலயா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ