இலவச யோகா பயிற்சி முகாம் முன்பதிவு இன்று துவக்கம்
புதுச்சேரி : பள்ளி மாணவர்களுக்கான இலவச யோகா பயிற்சி வகுப்பிற்கு முன்பதிவு இன்று துவங்குகிறது.புதுச்சேரி, சிவராம்ஜி யோகா மையம் மற்றும் சமர்ப்பணம் சேவை மையமும் இணைந்து ஆண்டு தோறும், கோடை விடுமுறையில் (8 முதல் 15 வயதிற்கு உட்பட்ட) மாணவ, மாணவிகளுக்கு) சிறப்பு பயிற்சி முகாம் நடத்தி வருகிறது.அதன்படி 4ம் ஆண்டு பயிற்சி முகாம் வரும் 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை லாஸ்பேட்டை, இ.சி.ஆரில் உள்ள ஸ்ரீசங்கர வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது.ஒரு வாரம் நடைபெறும் இம்முகாமில் யோகா, ப்ராணாயாமம், களரி, சிலம்பம், பரதநாட்டியம், பாட்டு, விளையாட்டு, வினாடி -வினா, கதை, ஓவியம் மற்றும் மருத்துவம் குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது.இப்பயிற்சி முகாமிற்கான முன்பதிவு முகாம் லாஸ்பேட்டை, கிருஷ்ணா நகர், மெயின் ரோட்டில் இயங்கி வரும் சிவராம்ஜி யோகா மையத்தில் இன்று 26ம் தேதி முதல் நாளை 27ம் தேதி வரை காலை 10:00 மணி முதல், மாலை 4:00 மணிவரை நடக்கிறது.முன்பதிவிற்கு வருபவர்கள், 3 பாஸ்போட் சைஸ் போட்டோ, ஆதார் கார்டு மற்றும் பிறப்பு சான்றின் நகல்கள் கொண்டு வர வேண்டும்.