உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பிரெஞ்சு துாதர் முதல்வருடன் சந்திப்பு

பிரெஞ்சு துாதர் முதல்வருடன் சந்திப்பு

புதுச்சேரி: சட்டசபையில் முதல்வர் ரங்கசாமியை, பிரெஞ்சு துாதர் சந்தித்து பேசினார். புதுச்சேரிக்கு வருகை தந்துள்ள இந்தியாவிற்கான பிரெஞ்சு துாதர் தியரி மாத்தார், நேற்று மதியம் சட்டசபையில் முதல்வர் ரங்கசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அப்போது, புதுச்சேரிக்கான பிரான்ஸ் நாட்டு துணைத் துாதர் எட்டியென் ரோலண்ட் பியக், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், திருமுருகன், ரமேஷ் எம்.எல்.ஏ., அரசுச் செயலர் கேசவன், கல்வித்துறை இயக்குநர் அமன் ஷர்மா, செய்தி மற்றும் விளம்பரத்துறை இயக்குநர் முனுசாமி ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ