உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுவை அருங்காட்சியகத்தில் பிரெஞ்சு அகராதி கண்காட்சி

புதுவை அருங்காட்சியகத்தில் பிரெஞ்சு அகராதி கண்காட்சி

புதுச்சேரி: புதுச்சேரியில் பிரெஞ்சு அகராதி கண்காட்சியை அலியான்சு பிரான்ஸ்சே இயக்குநர் லோரான் ழலிக்கூ பார்வையிட்டார். உலக அளவில் பிரெஞ்சு அகராதிகள், கலைக்களஞ்சியங்களை கொண்டு சென்றதில் லாரூஸ் பதிப்பகம் முக்கிய பங்காற்றியுள்ளது. இது 1852ம் ஆண்டு பியர் லாரூஸ் மற்றும் அகஸ்டின் போயர் ஆகியோரால் நிறுவப்பட்டது. இதில், பியர் லாரூஸ் பிரெஞ்சு இலக்கண ஆசிரியர், அகராதியாளர் மற்றும் கலைக்களஞ்சிய நிபுணர். அவரது பிறந்தநாளை முன்னிட்டு, லரூசு -173 என்ற தலைப்பில் சிறப்பு கண்காட்சி புதுவை அருங்காட்சியக ஆராய்ச்சி நுாலகத்தில் கடந்த 23ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இந்த கண்காட்சியினை பிரெஞ்சுப் பேராசிரியர் சிவாலியே வெங்கடசுப்பா துவங்கி வைத்தார். உ லக ஒன்றிய நாடுகள் நாளை முன்னிட்டு பிரெஞ்சு மொழி மற்றும் கலாசாரத்தை ஊக்குவிக்கும் கல்வி நிறுவனமான அலியான்சு பிரான்ஸ்சே எனும் பிரெஞ்சு உறவுக்கழகத்தின் இயக்குநர் லோரான் ழலிக்கூ கண்காட்சியினை பார்வையிட்டார். தொடர்ந்து அலியான்சு இயக்குநர் லோரான் ழலிக்கூக்கு, அருங்காட்சியக இயக்குநர் அறிவன் 1705 - இல் நிக்கோலசு தெ பெர் என்ற பிரஞ்சு படமவியலர் வரைந்த புதுவை அருங்காட்சியகத்தால் மறுஆக்கம் செய்யப்பட்ட பாரீசு - புதுச்சேரி படமத்தினை வழங்கினார். கண்காட்சி 31ம் தேதி மாலை 6 மணி வரை நடக்கிறது. கண்காட்சியில் லாரூஸ் பதிப்பக நிறுவனம் வெளியிட்ட பல்வேறு அகராதிகளும் கலைக்களஞ்சிய தொகுப்புகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. நுாலக மேலாளர் மனோரஞ்சினி ஒருங்கிணைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை