எரிபொருள் விலை உயர்வு: மா.கம்யூ.,ஆர்ப்பாட்டம்
பாகூர்: பாகூரில் பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து, மா.கம்யூ., கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மா.கம்யூ., பாகூர் கொம்யூன் கமிட்டி சார்பில், பாகூர் கடை வீதியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, பாகூர் கமிட்டி செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள், தமிழ்ச்செல்வன், மாநில குழு உறுப்பினர்கள் கலியன், இளவரசி, கமிட்டி உறுப்பினர்கள் பத்வாசலம், வடிவேலு, ஹரிதாஸ், சேகர் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசை கண்டித்து கண்டன உரையாற்றினார்.ஆர்ப்பாட்டத்தில், கமிட்டி உறுப்பினர் கௌசிகன், கிளை செயலாளர்கள் முருகையன், ஆனந்தராமன், சதாசிவம், வெங்கடாசலம், நெல்சன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.முன்னதாக, ஆர்ப்பாட்டத்தில், சமையல் எரிவாயு சிலிண்டர், அடுப்புக்கு மாலை அணிவித்து அவற்றை, சாலையில் வீசி, எரிபொருள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.