மேலும் செய்திகள்
குமரேஸ்வரர் கோவிலில் சூரசம்ஹார விழா துவக்கம்
29-Oct-2024
புதுச்சேரி: சாரம் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹார பிரம்மோற்சவ விழா வரும் 2ம் தேதி துவங்குகிறது. புதுச்சேரி, சாரம் முத்துவிநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி, நாகமுத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹார பிரம்மோற்சவ விழா வரும் 2ம் தேதி துவங்கி, 14ம் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி, வரும் 1ம் தேதி மாலை 6:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தியும், 2ம் தேதி காலை 7:00 மணிக்கு அபிஷேகம் மற்றும் விக்னேஸ்வர பூஜை, காலை 10:30 மணிக்கு காப்பு கட்டுதல், கொடியேற்றம் நடக்கிறது. தொடர்ந்து, தினமும் மாலை 5:00 மணிக்கு மகா அபிஷேகமும், இரவு 7:00 மணிக்கு யாகசாலை பூஜை ஆரம்பம், இரவு 8:00 மணிக்கு மகா பூர்ணாஹூதி, திபாராதனை மற்றும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடக்கிறது. முக்கிய நிகழ்வாக, வரும் 7ம் தேதி இரவு 7:00 மணிக்கு சக்திவேல் வாங்குதல், ஆட்டு கிடா வாகனத்தில் சூரசம்ஹாரமும், 8ம் தேதி இரவு 7:00 மணிக்கு திருக்கல்யாண உற்சமும், 10ம் தேதி காலை 8:30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல், இரவு 7:00 மணிக்கு கோவில் குளத்தில் தெப்பல் உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி நீலகண்டன், ஆலய அர்ச்சகர்கள் சிவராம சிவாச்சாரியார், கார்த்திகேய குருக்கள், உதவி தம்புரார் முத்துகுமாரசாமி செய்து வருகின்றனர்.
29-Oct-2024