உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குப்பை கிடங்காக மாறிய காந்தி விளையாட்டு பூங்கா

குப்பை கிடங்காக மாறிய காந்தி விளையாட்டு பூங்கா

நெட்டப்பாக்கம்; குப்பை கிடங்காக மாறிய நெட்டப்பாக்கம் காந்தி விளையாட்டு பூங்காவில் சிறுவர்கள் விளையாட முடியாமல் அவதியடைகின்றனர்.நெட்டப்பாக்கம் சிவன் கோவில் பின்புறம் காந்தி விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டது. இந்த பூங்காவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விளையாடும் வகையில், ஏணி, ஊஞ்சல், சறுக்கு மரம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.இங்கு நெட்டப்பாக்கம், பண்டசோழநல்லுார், கரியமாணிக்கம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள சிறுவர்கள், பள்ளி மாணவர்கள் விளையாடி வந்தனர். இதுமட்டுமின்றி பூங்கா அருகில் உள்ள நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் விளையாட்டு பயிற்சியினையும் மேற்கொண்டு வந்தனர்.பூங்கா போதிய பராமரிப்பின்றி, விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளது. பூங்கா இருந்த இடத்தை கொம்யூன் பஞ்சாயத்து மூலம் சமப்படுத்தி கம்பி வேலை அமைத்து அங்கு குப்பை மூட்டைகளை வைத்து வருகின்றனர். தொகுதி முழுதும் உள்ள குப்பை வண்டிகளை இங்கு நிறுத்துவதால் தற்போது சிறுவர் விளையாட்டு பூங்கா காணமால் போயுள்ளது.இங்கு இருந்த ஒரே ஒரு விளையாட்டு பூங்காவையும் குப்பை மூட்டைகள் அடுக்கும் இடமாக மாற்றியதால் சிறுவர்கள் விளையாட முடியாமல் ஏமாற்றுத்துடன் செல்கின்றனர்.புதுச்சேரியில் புதியதாக சிறுவர் விளையாட்டு பூங்காக்கள் அமைக்காத நிலையில், இந்த பூங்காவை அழிக்காமல் மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ