உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி சட்டசபையில்  விநாயகர் சதுர்த்தி

புதுச்சேரி சட்டசபையில்  விநாயகர் சதுர்த்தி

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையில் நேற்று விநாயகர் சதுர்த்தியையொட்டி சிறப்பு பூஜைகள் நேற்று நடந்தது.  சபாநாயகர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், தற்காலிக சபாநாயகர் அன்பழகன் தலைமையில் விநாயகருக்கு படையலிட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பூஜையில், சட்டசபை செயலர் தயாளன், முதல்வரின் தனிச் செயலர் அமுதவன், எம்.எல்.ஏ.,க்கள் ஐயப்பன், ரவிக்குமார், மோகன்தாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல், முதல்வர் அலுவலகம், அமைச்சர்களின் அலுவலகங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை