மேலும் செய்திகள்
மலைவாழ் மக்களுக்கு உதவி
04-Jun-2025
புதுச்சேரி : நாதன் அறக்கட்டளை, பிம்ஸ் மருத்துவமனை சார்பில் இலவச பொது மருத்துவ முகாம், வலம்புரி ஞானவிநாயகர் கோவிலில் நடந்தது.முகாமை, நாதன் அறக்கட்டளை நிறுவனர் சாமிநாதன் துவக்கி வைத்தார். குறிஞ்சி நகர் நலவாழ்வு சங்க தலைவர் புருேஷாத்தமன், ஞானவிநாயகர் கோவில் தலைவர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர்.இதில், டாக்டர் மவுலிஷ் தலைமையில் கிளாடிஸ், வினிதா உள்ளிட்ட 20க்கும் மேற்பட் டாக்டர்கள் கலந்து கொண்டு, பொது மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, கண், குழந்தைகள், மகப்பேறு, எலும்பு, மூட்டு, தோல், பல் மற்றும் அறுவை சிகிச்சை குறித்து ஆலோசனை மற்றும் சிகிச்சை அளித்தனர். முகாமில், இலவசமாக சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், இ.சி.ஜி பரிசோதனைகள் செய்யப்பட்டு, மருந்துகள் வழங்கப்பட்டன. அறக்கட்டளை நிர்வாகிகள் வெங்கடேசன், முருகன், சுரேஷ்குமார், நடராஜன், கார்த்திக், பாலா, விக்னேஷ், சுப்ரமணியன், ஆனந்த் ராஜ் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
04-Jun-2025