சிறுமி கர்ப்பம்; வாலிபர் மீது போக்சோ வழக்கு
புதுச்சேரி : லாஸ்பேட்டை நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் செல்வமணி 20; இவர் தனது உறவினரான 17 வயது சிறுமியை கடந்த ஆண்டு திருமணம் செய்தார். இந்நிலையில் சிறுமி கர்ப்பமானார்.பரிசோதனைக்காக புதுச்சேரி ராஜிவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்கு சென்றபோது, சிறுமிக்கு 17 வயது என்பது தெரிய வந்தது.இதுகுறித்த புகாரின் பேரில், செல்வமணி மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து லாஸ்பேட்டை போலீசார், விசாரித்து வருகின்றனர்.