மேலும் செய்திகள்
அரசு மருத்துவமனையில் மருத்துவ கருத்தரங்கம்
26-Feb-2026
புதுச்சேரி: உலக குளோக்கோமா வாரம் மார்ச் 8 முதல் 14ம் தேதி வரை கடைப்பிடிக்கப்பட்டது. இவ்வாரத்தையொட்டி, இந்திரா காந்தி அரசு மருத்துவமனை மற்றும் பட்ட மேற்படிப்பு பயிற்சி நிறுவனத்தின் கண் நோய் துறை மற்றும் தேசிய கண் பார்வை இழப்புத் தடுப்பு திட்டம் இணைந்து நேற்று முன்தினம் மருத்துவமனை வளாகத்தில் உள்ள மாநாட்டு அரங்கில் குளோக்கோமா விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின. நர்சிங் மற்றும் பராமெடிக்கல் மாணவர்களுக்கு போஸ்டர், ஓவியம், கோஷ வாசகம், குறும்படம், ரீல்ஸ் மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மருத்துவ கண்காணிப்பாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். கண் மருத்துவத் துறைத் தலைவர் தணிகாச்சலம் வரவேற்றார். டாக்டர்கள் ஆத்மநாதன்,ரவி மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி ஹர்ஷ்வர்த் சர்மா, செந்தமிழன் ரெனே, அமுதா, கவிதா, அஷ்வினி, ஆசிரியர்கள் மற்றும் நர்சிங் மற்றும் பராமெடிக்கல் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
26-Feb-2026