மேலும் செய்திகள்
மருத்துவ மாணவர்களின் தேர்தல் விழிப்புணர்வு
02-Apr-2026
புதுச்சேரி: புதுச்சேரி பெத்தி செமினார் சி.பி.எஸ்.இ., பள்ளியில், உலக வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தும் நோக்கில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு, பள்ளி முதல்வர் பாஸ்கல்ராஜ் தலைமை தாங்கினார். புவி வெப்பநிலை அதிகரிப்பு, பனிமலை உருகுதல் மற்றும் பருவநிலை மாற்றம் போன்ற பிரச்னைகள் குறித்து மாணவர்கள் ஓவியங்கள் மற்றும் விளக்கவுரை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாணவர்கள் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டிய வழிமுறைகள், இயற்கையை பாதுகாப்பதன் அவசியம் குறித்து விளக்கினர். தொடர்ந்து, பள்ளி முதல்வர் பாஸ்கல்ராஜ் பேசுகையில் 'மாணவர்களாகிய நீங்கள் அதிக மரங்களை நடுதல் வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக குறைத்து, சுற்றுச்சூழலை பாதுகாத்திட வேண்டும். அனைவரிடமும் இந்த விழிப்புணர்வை கொண்டு சேர்த்து சமூகத்தில் பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்திட வேண்டும். மாணவர்கள் அனைவரும் கோடை விடுமுறை நாட்களை பயனுள்ளதாக திட்டமிட்டு கல்வி மற்றும் வாழ்வில் முன்னேற தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். மாணவர்கள் அதிக தண்ணீர் குடிப்பதின் அவசியத்தை விளக்கினார். இறுதியாக வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில், மாணவர்கள் அனைவருக்கும் ருசி ஐஸ்கிரீம் வழங்கினார்.
02-Apr-2026