உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கோவிலுக்குள் குழந்தையிடம் தங்க காப்பு திருட்டு

கோவிலுக்குள் குழந்தையிடம் தங்க காப்பு திருட்டு

சிதம்பரம்: சிதம்பரத்தில் சாமி கும்பிடும்போது குழந்தையின் கையில் இருந்த ஒரு சவரன் தங்க காப்பு திருடிய மரம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். சிதம்பரம் பஸ் நிலையம் அருகே உள்ள கீழத்தெரு மாரியம்மன் கோவிலில் நேற்று (அக்.,23) இரவு, அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். தரிசனம் முடிந்து வெளியே வந்தபோது, அவரது குழந்தை கையில் அணிந்திருந்த ஒரு சவரன் தங்க காப்பு காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சிதம்பரம் நகர போலீசில் ராஜ்குமார் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை