உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கிராமங்களை நோக்கி அரசு நிர்வாகம் ஆலங்குப்பத்தில் இன்று குறை தீர்வு முகாம்

கிராமங்களை நோக்கி அரசு நிர்வாகம் ஆலங்குப்பத்தில் இன்று குறை தீர்வு முகாம்

புதுச்சேரி உழவர்கரை தாலுகாவிற்குட்பட்ட ஆலங்குப்பம் வருவாய் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று 22ம் தேதி காலை 10:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை கிராமங்களை நோக்கி புதுச்சேரி நிர்வாகம் என்ற மக்கள் குறை தீர்வு முகாம் நடக்க உள்ளது.முகாமில், திட்டம் மற்றும் ஆராய்ச்சித்துறை உழவர்கரை நகராட்சி, சுகாதாரத்துறை, ஆதி திராவிடர் நலத்துறை, மாவட்ட தொழில் மையம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை, விவசாயம் மற்றும் விவசாய நலத்துறை, மகளிர் மேம்பாட்டுத்துறை, இந்தியன் வங்கி உள்பட 10 துறைகள் மக்களுக்கு சேவைகள் வழங்க இருக்கின்றன.முகாமில், அனைத்து துறை அதிகாரிகளும் தங்கள் துறை சார்ந்த திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர். பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு அனைத்து விதமான சான்றிதழ்கள், வாரிசு, பட்டா மாற்றத்திற்கான விண்ணப்பங்கள் ஆதார் அட்டை போன்ற சேவைகள், பிறப்பு இறப்பு சான்றிதழ் வழங்குதல், வீட்டு வரி செலுத்துதல், மருத்துவ சார்ந்த சேவைகள் அனைத்தும் மக்களுக்கு வழங்கப்படஇருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ