அரசு பஸ் டிரைவருக்கு திடீர் நெஞ்சு வலி
சேத்தியாத்தோப்பு : சிதம்பரத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு 52 பயணி களை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் சென்னைக்கு புறப்பட்டது. டிரைவர் ஆறுமுகம், 48; ஓட்டினர். இரவு 11:30 மணிக்கு, பின்னலுார் அருகே சென்ற போது டிரைவர் ஆறுமுகத்திற்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடன் அவர் சுதாரித்தக் கொண்டு பஸ்சை சாலையோரமாக நிறுத்திவிட்டு, வலியால் துடித்தார்.உடன் பஸ் பயணிகள் மற்றும் அவ்வழியே சென்றவர்கள் டிரைவரை மீட்டு அவ்வழியே வந்த காரில் சேத்தியாத்தோப்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி பெற்ற பின் மேல் சிகிச்சைக்காக கடலுார் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பஸ் பின்னலுாரில் நிறுத்தப்பட்ட பஸ், மாற்று டிரைவர் மூலம் சென்னைக்கு புறப்பட்டு சென்றது.