உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  அரசு தொடக்கப் பள்ளி புனரமைக்கும் பணி

 அரசு தொடக்கப் பள்ளி புனரமைக்கும் பணி

நெட்டப்பாக்கம்: சூரமங்கலம் அரசு ஆரம்ப பள்ளியின் கட்டடம் புனரமைக்கும் பணியினை துணை சபாநாயகர் ராஜவேலு துவக்கி வைத்தார். நெட்டப்பாக்கம் தொகுதி, சூரமங்கலம் காலனியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் பொதுப்பணித்துறை சார்பில், ரூ. 48.20 லட்சம் மதிப்பில் பள்ளியின் கட்டடம், கழிவறைகள் புனரமைக்கப்பட உள்ளது. இதற்கான பணியினை துணை சபாநாயகர் ராஜவேலு துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பொதுப் பணித்துறை கட்டட கோட்டம் -2 செயற்பொறியாளர் பக்தவச்சலம், பள்ளி கல்வித்துறை முதன்மை கல்வி அதிகாரி குலசேகரன், உதவி பொறியாளர் எழில்வாணன், வட்டம் -4 துணை ஆய்வாளர் திருவரசன், இளநிலை பொறியாளர் ராதாகிருஷ்ணன், தலைமையாசிரியர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை