உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  அரசு பள்ளி ஆண்டு விழா

 அரசு பள்ளி ஆண்டு விழா

புதுச்சேரி: புதுச்சேரி, கோவிந்தசாலை அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு மற்றும் பரிசளிப்பு விழா நடந்தது. பள்ளி துணை ஆய்வாளர் செல்வி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் சுமதி வாழ்த்தி பேசினார். விழாவையொட்டி, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி மாணவர்களின் நடனம், பாடல், பேச்சு, நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஜான்சி சகாயமேரி, ராஜலட்சுமி, பாண்டியராஜன், மாலதி, கற்பகவதி மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை