உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  அரசு பள்ளி மாணவர்கள் கல்வி சுற்றுலா

 அரசு பள்ளி மாணவர்கள் கல்வி சுற்றுலா

திருக்கனுார்: வாதானுார் அன்னை சாரதா தேவி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் கல்வி சுற்றுலா சென்றனர். திருக்கனுார் அடுத்த வாதானுார் அன்னை சாரதா தேவி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் கல்வி சுற்றுலாவாக திருவக்கரை கல் மர பூங்காவிற்கு சென்றனர். தொடர்ந்து, உத்திரமேரூர் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள குட ஓலை முறையை விளக்கும் பழங்கால கல்வெட்டுகளை பார்வையிட்டனர். பின், 7ம் நுாற்றாண்டின் மிகப் பழமையான பல்லவர் காலத்து காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் கற்கோயில் சிற்பங்களை மாணவர்கள் கண்டு ரசித்தனர். கல்வி சுற்றுலாவில் 20 மாணவிகள், 25 மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் வீரையன் தலைமையில் ஆசிரியர்கள் பாலகுமார், வேலவன் ஆகியோர் வழி நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை