அரசு பள்ளி மாணவர்கள் கவர்னருக்கு நன்றி
புதுச்சேரி: அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட, 10 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலமாக மருத்துவ கல்வி பயின்று வரும் மாணவர்கள், கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து நன்றி தெரிவித்தனர். புதுச்சேரி மாநிலத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, சென்டாக் மூலம் மருத்துவப் படிப்பில் சேர, 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக, மருத்துவ கல்வி பயின்று வரும் மாணவர்கள், கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து நன்றி தெரிவித்து, வாழ்த்து பெற்றனர். அப்போது, ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்த மருத்துவ மாணவர்களின் கல்விக்கு உதவும் விதமாக, செல்வம் எம்.எல்.ஏ., புதுச்சேரி சென்டாக் மாணவர் - பெற்றோர் நலச் சங்கத்தின் தலைவர் நாராயணசாமி ஆகியோரின் முயற்சியால், பாடப் புத்தகங்கள், சீருடை, மருத்துவ உபகரணங்கள் மற்றும் நிதி உதவி வழங்கப்பட்டது. இவற்றை, கவர்னர் கைலாஷ்நாதன் மருத்துவ மாணவர்களுக்கு வழங்கி, நல்ல முறையில் படித்து புதுச்சேரி அரசுக்கும் மாநிலத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும்' என்றார்.