அரசு உதவி தொகை திட்டம் விண்ணப்பங்கள் வரவேற்பு
புதுச்சேரி: புதுச்சேரி அரசின் சமூக நலத் துறையின் கீழ் மாநில அரசு உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2026–-27 ம் ஆண்டிற்கான நிதி உதவி பெறுவதற்கு அரசுசாரா அமைப்புகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுதொடர்பாக சமூக நலத் துறை இயக்குநர் ராகிணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி அரசின் சமூக நலத் துறையின் கீழ் பதிவு செய்யப்பட்டு, உரிமம் பெற்ற தகுதியுள்ள அரசுசாரா அமைப்புகள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். சமூகப்பணியில் ஆர்வமும் தகுதியும் கொண்ட அனைத்து அரசுசாரா அமைப்புகளும், தங்களுக்குரிய விண்ணப்பப் படிவத்தில் தேவையான அனைத்து ஆவணங்களையும் இணைத்துச் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பப் படிவங்களை புதுச்சேரி சமூக நலத் துறையில் பெற்றுக்கொள்ளலாம். தகுதியுள்ள அமைப்புகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க டிச., 10ம் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினமோ அல்லது அதற்கு முன்பாகவோ விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு எண். 1, சாரதாம்பாள் நகர் முதன்மை சாலை, எல்லையப்பிள்ளைச்சாவடி, புதுச்சேரியில் அமைந்துள்ள சமூக நலத் துறை அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.