அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க ரூ.23.77 கோடி மானியம் கவர்னர் கைலாஷ்நாதன் ஒப்புதல்
புதுச்சேரி: புதுச்சேரியில் பணியாற்றும் அரசு உதவி பெறும் ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு வழங்க ரூ.23.77 கோடி ரூபாய் வழங்க கவர்னர் கைலாஷ்நாதன் ஒப்புதல் அளித்துள்ளார். புதுச்சேரியில் பணியா ற்றிம் அரசு உதவி பெறும் ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு கடந்த 7 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. இதனை கண்டித்து அரசு நிதி உதவிபொறும் அசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இதைத் தொடர்ந்து 32 பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் 5 மாத சம்பளம், ஓய்வூதியர்களுக்கு ரூ.23.77 கோடி மானியம் வழங்க கவர்னர் கைலாஷ்நாதன் ஒப்புதல் அளித்துள் ளார். இது குறித்து பள்ளி கல்வித்துறை சார்பு செயலர் வெர்பினா ஜெயராஜ் பிறப்பித்துள்ள உத்தரவு: கவர்னர் அனுமதித்துள்ள நிதி 5 மாத சம்பளம், ஓய்வூதியம் பலன்களுக்கு செலவிடப்படும். சம்பளத்திற்கான மொத்த செலவில் 95 சதவீதம் அரசு ஏற்கும். 5 சதவீத்தை பள்ளி நிர்வாகம் ஏற்கவேண்டும். உரிய திருத்தம் செய்யப்படும் வரை 95 சதவீதம் மானியம் நேரடியாக வழங்கப்படும். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.