12 மாநில உதய நாள் விழா கவர்னர் பங்கேற்பு
புதுச்சேரி: புதுச்சேரி கவர்னர் அலுவலகம் சார்பில் 12 மாநில உதய நாள் விழா காமராஜர் மணி மண்டபத்தில் நடந்தது. மத்திய அரசின் ஒரே பாரதம் - உன்னத பாரதம் இயக்கத்தின் கீழ், ஆந்திரா, கர்நாடகா, பஞ்சாப், சண்டிகர், டில்லி, அரியானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், உத்ரகாண்ட், ஜார்க்கண்ட், அந்தமான்– நிக்கோபார் தீவுகள், லட்சதீவு ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் உதய நாள் விழா கருவடிக்குப்பம் காமராஜர் மணி மண்டபத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கவர்னர் கைலாஷ்நாதன் கலந்து கொண்டு சிறப்பித்தார். நிகழ்ச்சியில் அந்தந்த மாநிலங்களின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில், புதுச்சேரியில் வசிக்கும், பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.