மேலும் செய்திகள்
எறும்பூர் அரசு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
30-Jan-2025
நெட்டப்பாக்கம்: மடுகரை வெங்கடசுப்பா ரெட்டியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள், ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.மடுகரை வெங்கடசுப்பா ரெட்டியார் அரசு மேல்நிலைப் பள்ளி 2023-24 பிளஸ் 2 பொதுத்தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றனர். இப்பள்ளியை பாராட்டி கவர்னர் கைலாஷ்நாதன், கேடயம் வழங்கினார். இதற்கான பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் சார்மி ஜோஸமின் வரவேற்றார். பள்ளி துணை முதல்வர் செம்பயின் வாழ்த்துரை வழங்கி, வரும் கல்வியாண்டில் தொடர்ந்து நுாறு சதவீதம் தேர்ச்சி அளிக்க மாணவிகள் நன்கு படிக்க வேண்டும். இதற்காக பள்ளி ஆசிரியர்கள் மாணவிகளை ஊக்கப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார். விரிவுரையாளர் சரவணன் நன்றி கூறினார்.
30-Jan-2025