உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கவர்னர் தமிழிசையின் எக்ஸ் பக்கம் முடக்கம்

கவர்னர் தமிழிசையின் எக்ஸ் பக்கம் முடக்கம்

புதுச்சேரி : புதுச்சேரி கவர்னர் தமிழிசையின் 'எக்ஸ்'பக்கம் மர்ம நபர்களால் முடக்கப்பட்டுள்ளது.கடந்த வாரம் திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் பேஸ்புக் பக்கத்தை மர்ம நபர்கள் 'ஹேக்' செய்து ஆபாச புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர்.இதனை தடுக்கக் கோரி கவர்னர் தமிழிசை மத்திய அரசை வலியுறுத்தி வந்தார். ஆனால் மீண்டும் ஆபாசப்படங்கள் திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் பேஸ்புக் பக்கத்தில் வந்தன. இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி கவர்னர் தமிழிசையின் 'எக்ஸ்' வலைதள பக்கத்தை மர்ம நபர்கள் நேற்று 'ஹேக்' செய்தனர். 'ஹேக்' செய்யப்பட்ட 'எக்ஸ்' சமூக வலைதளப் பக்கத்தை மீட்கும் முயற்சியில் கவர்னர் மாளிகை தொழில்நுட்ப பிரிவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.கவர்னரின் எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தை முடக்கிய மர்ம நபர்கள் யார், எதற்காக முடக்கினர் என்ற விவரம் எதுவும் வெளியாகவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை