மேலும் செய்திகள்
வயிற்று வலி அவதி மாணவர் தற்கொலை
08-Jul-2025
புதுச்சேரி, : ஏம்பலம் அருகே எலிபேஸ்ட் சாப்பிட்டு இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார்.ஏம்பலம் அடுத்த செம்பியப்பாளையம், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தமிழ் அமுது, 21; பி.எஸ்.சி., நர்சிங் முடித்து விட்டு வீட்டில் உள்ளார். இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் மீண்டும் வலி அதிகமானதால், மனமுடைந்த தமிழ் அமுது எலிபேஸ்ட்டை சாப்பிட்டு மயங்கி கிடந்தார். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். புகாரின் பேரில் கரிக்கலாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
08-Jul-2025