உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பட்டதாரி பெண் தற்கொலை

 பட்டதாரி பெண் தற்கொலை

புதுச்சேரி: முதலியார்பேட்டை, மூகாம்பிகை நகரை சேரந்தவர் ஜெயகுமார். இவர், 6 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர் மரப்பாலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் வேலை செய்து வருகிறார். இவரது மூத்த மகள் பவித்ரா, 28; பொறியியல் பட்டதாரி. இவர் சில வருடங்களாக அரசு வேலைக்காக போட்டி தேர்வு எழுதி வந்தார். போட்டி தேர்வில் தோல்வி அடைந்ததால் விரக்தியில் இருந்து வந்தார். கடந்த 16ம் தேதி காலை வீட்டில் உள்ள மின் விசிறியில் துாக்குப்போட்டு கொண்டார். அதனை பார்த்த அவரது தாய் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு, ஜிப்மரில் சேர்த்தார். அங்கு, பவித்ரா சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ