உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஜிப்மரில் நாளை மறுதினம் பட்டமளிப்பு விழா

ஜிப்மரில் நாளை மறுதினம் பட்டமளிப்பு விழா

புதுச்சேரி: ஜிப்மர் ஆடிட்டோரியத்தில் நாளை மறுதினம் நடக்கும் 15வது பட்டமளிப்பு விழாவில் மத்திய அமைச்சர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க உள்ளார். ஜிப்மர் 15வது பட்டமளிப்பு விழா நாளை மறுதினம் (21ம் தேதி) அப்துல்கலாம் ஆடிட்டோரியத்தில் நடக்கிறது. மத்திய சுகாதார அமைச்சர் நட்டா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார். கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், எம்.பி.,க்கள் செல்வகணபதி, வைத்திலிங்கம், அரசு கொறடா ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். ஜிப்மர் தலைவர் சித்ரா சர்க்கார் தலைமை தாங்குகிறார். இயக்குனர் வீர் சிங் நேகி ஜிப்மர் நிறுவன அறிக்கையை சமர்ப்பிக்கிறார். விழாவில் மொத்தம் 816 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட உள்ளன. 88 பேருக்கு பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன. மத்திய அமைச்சர் வருகையையொட்டி, ஜிப்மர் வளாகம், விழா நடைபெற உள்ள அப்துல்கலாம் ஆடிட்டோரியம் உள்ளிட்ட பகுதிகள் அழகு படுத்தும் பணி வேகமாக நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை