மேலும் செய்திகள்
மண்ணாடிப்பட்டு கொம்யூனில் நாளை கிராம சபை கூட்டம்
25-Jan-2025
திருக்கனுார் : மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், குடியரசு தினத்தை முன்னிட்டு 18 கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடந்தது.செல்லிப்பட்டு பஞ்சாயத்து அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு ஆணையர் எழில்ராஜன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், புயல், கனமழை காரணமாக சங்கராபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, அப்பகுதி சுடுகாடு மற்றும் இடுகாடு பாதை தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. அதனை சீரமைத்து தர வேண்டும் உள்ளிட்ட பலதீர்மானம் நிறைவேற்றப்பட்டன.ஆணையர் எழில்ராஜன் மற்றும் பொதுப்பணித்துறை நீர்பாசன பிரிவு அதிகாரிகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட, சுடுகாட்டு பாதையை பார்வையிட்டு, அதனை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் உறுதி அளித்தனர்.கொம்யூன் உதவி பொறியாளர் மல்லிகா அர்ஜூனன் உடனிருந்தனர்.
25-Jan-2025