உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நிலத்தடி நீர் பிரச்னை அதிகாரிகள் ஆலோசனை

நிலத்தடி நீர் பிரச்னை அதிகாரிகள் ஆலோசனை

புதுச்சேரி: புதுச்சேரியில் கடல் நீர் வேகமாக நிலத்தடி நீரில் புகுந்து வருவதால், மாநிலம் முழுவதும் முழு ஆய்வு நடத்தி, அதனடிப்படையில் செயல் திட்டத்தை வகுக்க அதிகாரிகள் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.மத்திய நீர்வள ஆணையம், மத்திய நிலத்தடி நீர் வாரியம், காலாண்டிற்கு ஒருமுறை புதுச்சேரியின் நிலத்தடி பிரச்னைகள் சம்பந்தமாக, அரசு துறையினருடன் கலந்து ஆலோசித்து வருகிறது.அதன்படி, பொதுப்பணித்துறை அலுவலகத்தில், புதுச்சேரி நிலத்தடி நீர் பிரச்னைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. புதுச்சேரி தலைமை பொறியாளர் தீனதயாளன் தலைமை தாங்கினார். நீர்வள தலைமை ஆணைய தலைமை பொறியாளர் தங்கமணி, மத்திய நிலத்தடி நீர் வாரிய மண்டல இயக்குநர் சிவக்குமார் மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில், புதுச்சேரியில் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறுவது குறித்து, நீண்ட நேரமாக விவாதிக்கப்பட்டது.கடல் நீர் வேகமாக நிலத்தடி நீரில் புகுந்து வருவதால், மாநிலம் முழுவதும் முழு ஆய்வு நடத்தி, அதன் அடிப்படையில், தடுப்பதற்கான செயல் திட்டத்தை வகுப்பது என முடிவு செய்யப்பட்டது. குடிநீருக்காக நிலத்தடியில் போர்வெல் போடப்படுகிறது. அப்படி போர்வெல் போடும்போது, கடல் நீர் புகுந்த இடங்களை தவிர்த்து, மற்ற இடங்களில் குடிநீர் எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை