உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஜி.எஸ்.டி., வரி சீர்திருத்தங்களுக்கு கைமேல் பலன் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை அதிகரிப்பு

ஜி.எஸ்.டி., வரி சீர்திருத்தங்களுக்கு கைமேல் பலன் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை அதிகரிப்பு

புதுச்சேரி: ஜி.எஸ்.டி., சீர்திருத்தங்களுக்கு பிறகு புதுச்சேரியில் வாகனங்கள்,அத்தியாவசிய பொருட்களின் விற்பனை பல மடங்காக அதிகரித்துள்ளது வணிக வரித் துறை ஆய்வில் தெரிய வந்துள்ளது. புதுச்சேரி வணிக வரி ஆணையர் யாசின் சவுத்ரி செய்திக்குறிப்பு: இந்திய அரசின் அடுத்த தலைமுறை ஜி.எஸ்.டி., சீர்திருத்தங்கள் மறைமுக வரி முறையின் ஒரு மிகப் பெரிய எளிமைப்படுத்தலை குறிக்கிறது. புதுச்சேரி வணிக வரித் துறையின் பகுப்பாய்வில் இந்த சீர்திருத்தங்களின் விளைவாக புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பொருளாதார நடவடிக்கைகள் அதிகரித்திருப்பதை காட்டுகிறது. புதுச்சேரி அரசின் போக்குவரத்துத் துறையின் விவரங்களின் படி வாகனப் பதிவுகளின் அளவு 35 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் கார்களின் எண்ணிக்ககை மட்டும் கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடும்போது 37 சதவீதம் அதிகரித்துள்ளது. பைக்குகளின் விற்பனை 35 சதவீதம், மூன்று சக்கர வாகனங்கள் - 38 சதவீதம், சரக்கு வாகனங்கள் 53 சதவீதம், பஸ்கள் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. இதேபோல், முக்கிய பல்பொருள் அங்காடிகளின் எப்.எம்.சி.ஜி., விற்பனை விவரங்களின் படி, மக்கள் பயன்படுத்தும் குறிப்பிட்ட வகை பொருட்களின் விற்பனை 15 சதவீதம் அதிகரித்துள்ளது. சாதாரண மக்கள் தினசரி பயன்படுத்தும் ஹேர் ஆயில் போன்ற பொருட்களில் கூட விற்பனை அளவு 48 சதவீதம், நெய் மற்றும் பற்பசை விற்பனை முறையே 49 சதவீதம் மற்றும் 10 சதவீத அதிகரித்துள்ளது. இந்த புள்ளி விவரங்கள் ஜி.எஸ்.டி., சீர்திருத்தங்களால் புதுப்பிக்கப்பட்ட நுகர்வோர் நம்பிக்கை மற்றும் அதிக செலவிடும் திறனை குறிக்கிறது.வணிக சங்க அமைப்புகள், ஜி.எஸ்.டி., வல்லுநர்களுக்கு தொடர்ச்சியான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தியதன் மூலம் இந்த சீர்திருத்தங்களை புதுச்சேரி வணிக வரித்துறை தீவிரமாகவும் சீராகவும் செயல்படுத்தி வருகிறது. ஜி.எஸ்.டி., வரி விகித மாற்றங்களின் பொருளாதார தாக்கத்தை வணிக வரித்துறை தொடர்ந்து கண்காணித்து, குறைந்த வரி விகிதங்களின் பலன் பொதுமக்களுக்கு முழுமையாக சென்றடைவதை உறுதி செய்யும். பண்டிகைக் கால விற்பனையும், ஜி.எஸ்.டி., சீர்திருத்தங்கள் மற்றும் விகிதக் குறைப்பும் இணைந்து, வருவாய் வளர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சி வரும் மாதங்களில் மேலும் வலுப்பெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை