உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நவபாஷான சித்தர் பீடத்தில் நாளை குருபூஜை விழா

நவபாஷான சித்தர் பீடத்தில் நாளை குருபூஜை விழா

வில்லியனுார்: வில்லியனுார் அருகே உள்ள சற்குரு நவபாஷான சித்தர் ஜீவபீடத்தில் நாளை குருபூஜை விழா நடக்கிறது. வில்லியனுார் அடுத்த தமிழக பகுதியான சந்திக்குப்பம் கிராமத்தில் பிரசித்திபெற்ற சற்குரு நவபாஷான சித்தர் ஜீவ பீடம் உள்ளது. ஒதியம்பட்டு காசிவிஸ்வநாதர் கோவிலுக்கு நேர் எதிரிலும் சங்கராபரணி நதிக்கரைக்கு வடக்கே அமைந்துள்ள இந்த ஜீவ பீடத்தில் தியான நிலையில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் சற்குரு நவபாஷான சித்தருக்கு நாளை 16ம் தேதி மகா குரு பூஜை விழா நடக்கிறது.அதனையொட்டி, நவபாஷான சித்தர் பீடத்தில் நாளை காலை 6:45 மணி முதல் 7:45 மணிவரை கோ பூஜை, மகா கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகளும், காலை 9:00 மணிக்கு சித்தர் ஜீவ பீடத்தில் மூலிகை அபிேஷகம் மற்றும் 108 சங்கு அபிேஷகம், பகல் 11:30 மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு 7:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை