பெட்டிக்கடையில் குட்கா விற்றவர் கைது
அரியாங்குப்பம்: பெட்டிக்கடையில் சிகரெட் மற்றும் குட்கா பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர். வீராம்பட்டினம் அருகே பெட்டிக்கடையில், குட்கா மற்றும் சிகரெட்கள் விற்பனை செய்வதாக அரியாங்குப்பம் போலீசாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார், நேற்று அங்கு சென்று, பெட்டிக்கடையில் சோதனை செய்தனர். கடையில் 1.8 கிலோ குட்கா மற்றும் சிகரெட் பாக்கெட்டுகள் இருந்ததை கண்டுபிடிக்கப்பட்டன. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து, பவானி நகரை சேர்ந்த குமரகுரு, 45; என்பவரை கைது செய்து, குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.