மேலும் செய்திகள்
குட்கா பறிமுதல்
12-May-2025
புதுச்சேரி; மங்கலம் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது ஏம்பலம் நத்தமேடு பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அங்கிருந்த பெட்டிக்கடையில் ஆய்வு செய்தனர்.அங்கு குட்கா பொருட்கள் விற்றது தெரியவந்தது. இதையடுத்து கடையில் இருந்த ரூ. 25 ஆயிரம் மதிப்பிலான குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.பின் கடை உரிமையாளரானநத்தமேடு ஏரிக்கரை மெயின்ரோட்டைச் சேர்ந்த சஞ்சீவ் ,31; மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
12-May-2025