குட்கா விற்றவர் கைது
புதுச்சேரி: காலாப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். இ.சி.ஆரில் பள்ளி அருகில் உள்ள பெட்டிக்கடையில் குட்கா பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று அங்குள்ள கடைகளில் ஆய்வு செய்தனர். பிள்ளைச்சாவடி பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், 64, என்பவரது கடையில் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், கூல்லீப், விமல் பாக்கு உள்ளிட்ட குட்கா பொருட்கள் விற்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப் பதிந்து, கைது செய்தனர். குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.