உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  குட்கா விற்றவர் கைது

 குட்கா விற்றவர் கைது

புதுச்சேரி: குட்கா பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர். காலப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் மற்றும் போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது பெரியகாலப்பட்டு கொல்லிமேடு பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்த சென்று அங்குள்ள கடைகளில் ஆய்வு செய்தனர். அதில் அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தகுமார் 35, என்பவரது கடையில் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், கூல்லீப், விமல் பாக்கு உள்ளிட்ட குட்கா பொருட்கள் வைத்துக் கொண்டு விற்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிந்து, கடையில் இருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை