உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரூ. 1 லட்சம் குட்கா பறிமுதல்

ரூ. 1 லட்சம் குட்கா பறிமுதல்

பாகூர் : கிருமாம்பாக்கம் பகுதி பெட்டிக் கடைகளில் போலீசார் நடத்திய சோதனையில் தடைசெய்யப்பட்ட ரூ. 1 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.கிருமாம்பாக்கம் போலீசார் மற்றும் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று முள்ளோடை பகுதியில் உள்ள பெட்டிக் கடைகளில் அதிரடியாக சோதனை நடத்தினர்.அதில், தடை செய்யப்பட்ட புகையிலை, பான்பராக், பான்மசாலா, ஹான்ஸ் உள்ளிட்ட 85 கிலோ எடையுள்ள ரூ. 1 லட்சம்மதிப்பிலான குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.இது தொடர்பாக, மணப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விஜயன் 52; மதிக்கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த அன்பரசன் 37; ராஜா 35;உச்சிமேட்டை சேர்ந்த சுரேஷ் 37; ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை