மேலும் செய்திகள்
மருத்துவ கல்லுாரியில் அறுவை சிகிச்சை மாநாடு
30-Jan-2026
புதுச்சேரி: கலிதீர்தாள்குப்பம், மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஆண்கள் விடுதியில், மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் நவீன வசதிகளுடன் கூடிய உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது. மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை கல்வி நிறுவன செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், இணை செயலாளர் வேலாயுதம் ஆகியோர் தலைமை தாங்கினர். உடற்பயிற்சி கூடத்தை மணக்குள விநாயகர் கல்வி நிறுவன தலைவர் தனசேகரன் திறந்து வைத்தார். கல்லுாரி மற்றும் மருத்துவமனை (பொ) இயக்குநர் கார்த்திகேயன், டீன் சஞ்சய், மருத்துவ கண்காணிப்பாளர் பிரகாஷ், விளையாட்டு குழுத்தலைவர் பாலகிருஷ்ணன், உடற்கல்வி இயக்குனர் விஜயகுமார் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். இதுகுறித்து கல்லுாரி நிர்வாகத்தினர் கூறுகையில், 'இந்த உடற்பயிற்சி கூடத்தில் டிரெட்மில், ஸ்பின் பைக், 4 ஸ்டேஷன் மல்டி ஜிம், கேட்டில் பெல், ஒலிம்பிக் ரப்பர் வெயிட் பிளேட்கள் உள்ளிட்ட பல்வேறு உடற்பயிற்சி சாதனங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த உடற்பயிற்சி கூடம் மூலம், மருத்துவகல்வியில் ஈடுபட்டு வரும் மாணவர்கள், தங்களின் உடல் ஆரோக்கியம், மனநலம், பாதுகாத்துக் கொள்ள உதவியாக இருக்கும் என, தெரிவித்தனர். மாணவர்கள் கூறுகையில், நீண்ட நேர படிப்பு, பயிற்சி மற்றும் மருத்துவ பணிச்சுமை காரணமாக ஏற்படும் உடல் சோர்வை குறைக்க உடற்பயிற்சி கூடம் பெரிதும் பயன்படும்' என்றனர்.
30-Jan-2026